தங்கம் விலை அதிரடி சரிவு..!
புத்தாண்டின் முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்து தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க வைத்தது. தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று காலையில் மீண்டும் உயர்ந்து மாலையில் சரிந்தது.
நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் 1,02,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து மாலை வேளையில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் 1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,640க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.85,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும், ஒரு கிலோ ரூ.2,72,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





