தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், நேற்று முன் தினம் முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
நேற்று அதன் விலை சற்று குறைந்து ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.12,350க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,350க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.222க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




