--- --:--:-- --

ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை..!

2

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்த நிலையில் தொடர்ந்து 13ஆம் தேதி அதே விலையே நீடித்தது.

 

கடந்த 12ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்த நிலையில் தொடர்ந்து 13ஆம் தேதி அதே விலையே நீடித்தது. அதன் படி கடைசியாக 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,370க்கும், ஒரு சவரன் ரூ.98,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,460க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,400க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கும் ஒரு கிலோ ரூ.2,13,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon