திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி கூட்டம்..!
திருவண்ணாமலையில், திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டலக் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி மண்டலக் கூட்டத்தில் பங்கேற்கும் இளைஞரணியினரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 91 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திமுகவின் வடக்கு மண்டலத்தின் இளைஞரணி கூட்டம் திருவண்ணாமலை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்கவுள்ள நிலையில், திமுக இளைஞரணியினரை கூட்டத்திற்கு வரவேற்று காணொலி வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் அண்ணா பேசியபோது, “I belong to Dravidian Stock” என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதை குறிப்பிட்டு வரவேற்றுள்ளார். திமுகவின் இளைஞர்களை கொள்கைரீதியாக வளர்த்தெடுக்கவே இந்த கூட்டம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.





