கஞ்சா வழக்கில் நடிகர் சிம்புவின் படத்தின் இணை தயாரிப்பாளர் கைது!
சென்னையில் பதிவான கஞ்சா வழக்கில், நடிகர் சிம்புவின் படமான ‘ஈஸ்வரன்’ படத்தின் இணை தயாரிப்பாளரான சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்டாம்ஸ் சாலையில் உள்ள சர்புதீனின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதைப் விருந்து (Party) நடந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. சர்புதீன் நடத்திய போதைப் விருந்தில், தற்போது நடிப்பில் உள்ள சில சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா என்பது குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.





