--- --:--:-- --

அரையாண்டு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அட்டவணை

1

மிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்விற்கான மாணவர்களை வேகமாக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

 

இதில், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தேர்வு தொடங்கி 23ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் டிசம்பர் 15ஆம் தேதி தேர்வு தொடங்கி 23ஆம் தேதி நிறைவடைகிறது.

 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

Right Menu Icon