கழிவுநீர் தொட்டியில் எலும்புகள் – சென்னையில் பரபரப்பு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18-வது கேட்டின் அருகில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர் தொட்டியை திறந்து நவீன எந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் மனித மண்டை ஓடு, நீளமான 2 எலும்புகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்று மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை பறிமுதல் செய்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




