--- --:--:-- --

வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

1

ங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (01.10.2025) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (02.11.2025) காலை 05:30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08:30 மணி அளவில், வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.

 

இந்நிலையில், இன்று (02.11.2025) காலை 05:30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் மற்றும் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (02.11.2025) மற்றும் நாளை (03.11.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

மேலும் 04.11.2025 வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.11.2025 மற்றும் 06.11.2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.11.2025 வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Right Menu Icon