--- --:--:-- --

மதுரை ஆதீனத்தை விசாரிக்கத் தடையில்லை – ஐகோர்ட் உத்தரவு

6

துரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரை ஆதீனத்தை விசாரிக்கத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

 

மேலும், ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

 

கடந்த மே மாதம் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றடு. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக பேசியது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக மதுரை ஆதினம் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக காவல்துறையின் விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என கூறினார்.

 

இதையடுத்து, நீதிபதி, மதுரை ஆதினத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என தெளிவுப்படுத்தினார். மேலும், விசாரணைக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பாக ஆதீனத்திற்கு காவல்துறை தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார். அதோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆதீனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Right Menu Icon