--- --:--:-- --

சரத்குமார் – சண்முக பாண்டியனின் ‘கொம்புசீவி’ டீசர் வெளியீடு!

3

ண்முக பாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில், ‘படைத்தலைவன்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

இந்தப் படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் ‘கொம்புசீவி’. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை பொறுத்தவரை கிராமத்து கதைக்களத்தில் ‘பொன்ராம்’ டச் தெரிகிறது. சரத்குமார் – சண்முக பாண்டியன் இணைந்து நீதிமன்றத்தில் பேசுவது, அவர்கள் செய்யும் சேட்டை, சண்டை காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.

 

ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளதை டீசர் காட்சிகள் உணர்த்துகின்றன. சண்முக பாண்டியன் – சரத்குமார் காம்போ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon