--- --:--:-- --

இறைவன் ஏசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – சீமான்

3

மிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும் யாருடன் சேர்ந்தால் லாபம் அதிகம் என சீர்தூக்கிப் பார்த்து வருகின்றன.

 

திமுகவும், அதிமுகவும் கூட்டணியை அமைத்துவிட்ட போதிலும், தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக முடிவு எடுக்காமல் உள்ளன. பிரிந்து கிடக்கும் பாமகவில் அன்புமணி தரப்பு பாஜகவுடன் ராசியாக உள்ள நிலையில் நிறுவனர் ராமதாஸ் பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் காணப்படுவதாக கூறப்படுகிறது.

 

பிரதான கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்கும் வகையிலான ‘உரையாடல் அமர்வு’ நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அப்போது, வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அதில் ஒவ்வொரு முறையும் நீங்க இந்த கேள்விய கேட்கீறீர்கள், நானும் பதில் சொல் கொண்டே இருக்கிறேன். கண்டிப்பாக சொல்கிறேன் இறைமகன் இயேசு மீது ஆணையாக சொல்கிறேன் இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார்.

 

எப்போது சட்டமன்ற செல்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், மக்கள் மற்றும் இறைவன் அருளால் வரும் தேர்தலிலேயே நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தான் ஆட்சிக்கு வந்தால் ‘பிக் பாஸ்’ போன்று எங்கும் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணித்துக் கொண்டே இருப்பேன் எனவும் சீமான் கூறினார்.

Right Menu Icon