பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் வாரத்திலேயே வெளியேறிய போட்டியாளர்..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் ஒருவாரத்தை நெருங்குகிறது. இதில் பிக்பாஸ் வீட்டியிலிருந்து வெளியேற்றப்படும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்த கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த சீசன்களை போல அல்லாமல் பெரும்பாலும் இன்ஃபுளுவன்சர்கள் தான் இந்த சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் திவாகர், ஆதிரை, கனி, கலை, வி.ஜே.பார்வதி, விக்னேஷ், கம்ருதின் என 20 பேர் பிக்பாஸ் வீட்டையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முதல் வாரத்திலேயே பல களேபரங்கள் நடந்துள்ளன. ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடுமே தன்னை டார்கெட் செய்வதாக திவாகர் பிக்பாஸிடம் முறையிட்டார். பலரும் அவரை வம்புக்கு இழுப்பது, கிண்டல் செய்வது என கலாய்த்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக வி.ஜே.பார்வதி இருக்கிறார். இருவருக்குள்ளும் ஒரு பாண்டிங் உருவாகியிருக்கிறது.
இதில் மகாநதி சீரியல் நடிகர் கம்ருதின், திவாகரை பைத்தியக்காரன், லூசு, மெண்டல் என திட்டுகிறார். அந்த வீடியோவில் “ பைத்தியகாரனையெல்லாம் சேத்து வச்சிருக்கானுங்க, ஹே பைத்தியக்காரா, லூசு, மெண்டல், உள்ள போடா மெண்டல், ஹே லூசு உள்ள போடா என பேசினார்.
உடனே நடிகர் சபரி, “நீ பேசுவது தவறு இப்படி பேசாதே” என எடுத்துச் சொல்கிறார். ஆனாலும் கேட்காமல் என்ன வேணாலும் நடக்கட்டும். கரியர் போனால் பரவாயில்லை. எனக்கு ஐடி வேலை இருக்கு நான் போயிடுவேன்” என்கிறார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் கம்ருதினை விமர்சித்தனர்.
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து ஒருவர் வெளியேறியிருக்கிறார். அவர் தான் நந்தினி. தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே அவர் அப்செட்டில் இருந்தார். தற்போது அவர் வெளியேறியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் வார சலுகை இந்த வருடமும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், கடந்த சீசனை போல இந்த சீசனிலும் முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது. நாமினேஷன் மற்றும் ரசிகர்களிடம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






