--- --:--:-- --

CPI மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு..!

11

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில், மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முத்தரசன் இப்பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
Right Menu Icon