--- --:--:-- --

செப்.7 சந்திர கிரகணம்: 12 மணி நேரம் திருப்பதி மூடல்!

5

செப்டம்பர் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே திருப்பதி கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.

 

அதன்படி 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon