கூட்டம் கூடுவார்கள் ஆனால் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து
கொடி கம்பம் விழுந்ததைப் பார்த்து பயந்து விட்டேன். கொடி ஏற்றுவதற்கு மற்ற தலைவர்களைப் போல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய கொடி கம்பம் சாய்ந்தும், யாரும் காயப்படவில்லை என்பதில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை விஜய் மாநாடு குறித்து, மிக்க மகிழ்ச்சி. ராம்ப் வாக்கில் விஜய் செல்லும்போது தொண்டர்கள் வராமல் இருக்க கிரீஸ் தடவுகிறார்கள். தயவு செய்து அதை செய்யாதீர்கள். எல்லாத் தலைவர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்.
கொடி கம்பம் விழுந்ததைப் பார்த்து பயந்து விட்டேன். கொடி ஏற்றுவதற்கு மற்ற தலைவர்களைப் போல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய கொடி கம்பம் சாய்ந்தும், யாரும் காயப்படவில்லை என்பதில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகம் ஈடுபட வேண்டும்.
கூட்டம் கூடுவார்கள் ஆனால் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது. ஒவ்வொரு மாநாட்டிற்கும் அண்ணா பெரியார் போன்ற ஒவ்வொருவரின் படங்களை யோசித்துப் பார்த்து யோசித்துப் பார்த்து சேர்ப்பார். தலைவர்களை மரியாதையாக நடத்துங்கள். தவெக தலைவருக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வரட்டும். பிறகு பார்க்கலாம். அரசியலில் எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் சீமான், விஜய் இருவரும் வேறு வேறு அரசியல் பாதையில் இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணிக்கு எதிரானவர்கள் இணைய வேண்டும் என்றுதான் சொன்னோம். விஜய்க்கு தமிழிசை அழைப்பு என்று நீங்கள் போடுவீர்கள். விஜயின் மாநாட்டை விட உள்துறை அமைச்சர் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும். சாதாரண தொண்டர் கூட பிரதமராக ஜனாதிபதியாக வரமுடியும் என பாஜக நிரூபித்துக் காண்பித்துள்ளது.
இண்டி கூட்டணிக்கு என் கண்டனம். சி.பி. ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணியில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றார் அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ் என்று தெரியவில்லையா? திமுக செய்வது வரலாற்றுப் பிழை. நேற்றைய நாள் கருப்பு நாள் என முதல்வர் கூறுகிறார். மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.





