--- --:--:-- --

ஆக.26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

2

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 26ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், சுமார் 3.05 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15, 2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

 

முதல் கட்டமாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தற்போது, இந்தத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கிவைக்க உள்ளார். இது, கல்வி மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டையும் இணைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையாகக் கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon