--- --:--:-- --

4 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

7

மிழகத்தில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon