’கிங்டம்’ படத்தை எதிர்த்து போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
கோவை தனியார் வணிக வளாகத்தில் ‘கிங்டம்’ படத்தை எதிர்த்து போராடிய நாதகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்திருந்தார்.






