--- --:--:-- --

இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – தமிழக அரசு அரசாணை

5

இணையம் சார்ந்த 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டது.

 

அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு திட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon