--- --:--:-- --

தேசிய விருதுக் குழுவிற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்!

3

இந்திய அளவில் திரைத்துறையின் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணியில் வெளியான பார்க்கிங் படம் வென்றது. இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் வென்றார்.

 

மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் வெளியான லிட்டில் விங்ஸ் குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது.

 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம், ஷாருக் கானுக்கு முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல் ஷாருக் கானுடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதை 12th Fail படத்தின் நாயகன் விக்ராந்த் மாஸி பகிர்ந்து கொள்கிறார். ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமாரின் வாழ்க்கையை தழுவி உருவான 12th fail படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியுள்ளது.

 

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் வெளியான லிட்டில் விங்ஸ் குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம், ஷாருக் கானுக்கு முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

 

அதேபோல் ஷாருக் கானுடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதை 12th Fail படத்தின் நாயகன் விக்ராந்த் மாஸி பகிர்ந்து கொள்கிறார். ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமாரின் வாழ்க்கையை தழுவி உருவான 12th fail படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியுள்ளது. மலையாளத்தில் அறிமுக இயக்குநர் கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் ஊர்வசி, பூ பட நடிகை பார்வதி நடிப்பில் பெண்களை மையமாக வைத்து உருவான உள்ளொழுக்கு (Ullozhukku) சிறந்த மலையாள திரைப்படமாக தேர்வானது.

 

ஊர்வசி சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது.
மலையாளத்தில் அறிமுக இயக்குநர் கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் ஊர்வசி, பூ பட நடிகை பார்வதி நடிப்பில் பெண்களை மையமாக வைத்து உருவான உள்ளொழுக்கு (Ullozhukku) சிறந்த மலையாள திரைப்படமாக தேர்வானது.

 

ஊர்வசி சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கிலும், வகுப்புவாத பிரிவை விதைக்கும் எண்ணத்திலும் தவறான தகவலை இப்படம் பரப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் படத்திற்கு விருது கொடுத்ததன் மூலம், சங் பரிவாரின் பிளவுப்படுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய கதைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விருதுக்குழு கொடுத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.

 

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கிலும், வகுப்புவாத பிரிவை விதைக்கும் எண்ணத்திலும் தவறான தகவலை இப்படம் பரப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்தப் படத்திற்கு விருது கொடுத்ததன் மூலம், சங் பரிவாரின் பிளவுப்படுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய கதைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விருதுக்குழு கொடுத்திருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாகவும் விளங்கும் கேரளா அவமதிக்கப்பட்டு இருப்பதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, மலையாளிகள் மட்டுமின்றி, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாகவும் விளங்கும் கேரளா அவமதிக்கப்பட்டு இருப்பதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, மலையாளிகள் மட்டுமின்றி, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon