--- --:--:-- --

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கைலாய காட்சி நடைபெற்றது!

10

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி அம்பாள் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து இன்று அம்பாள் திருமண அலங்காரத்தில் கைலாச காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் வழங்க தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. முன்னதாக திருவாடானை கோயிலில் சுந்தரர் கையாலயம் சென்ற காட்சி நடந்தது. சுந்தரர் வெள்ளை யானையில் மலர் மாலைகளால அலங்கரிக்கபட்டு காட்சியளித்தார்.

 

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திரு நொடித்தான் மழை என்று பத்தி பாடல்களை பாடியபடி சுந்தரர் சிவனை நோக்கி சென்ற காட்சி நடந்தது அதனைத் தொடர்ந்து தீபாதாரணை நடந்தது. அதனை தொடர்ந்து பன்னிரு திருமுறைகள் ஒதுவாரால் பாடப்பட்டது. இந்நிகழவில் நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெற்றச் சென்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon