ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..!
அரக்கோணம் அருகே கார் -லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் அரக்கோணத்தை சேர்ந்த தர்மராஜா(55) அவரது மனைவி லதா(45) மற்றும் மகன் தினேஷ்(20) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




