வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க ‘நாகம்’ செயலி!
வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக நாகம்(NAAGAM) என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு இச்செயலியை வெளியிட்டு, பாம்பு பிடி வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
TN-ல் கடந்தாண்டு மட்டும் 13,518 பேர் பாம்பு கடித்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 21 பேர் உயிரிழந்தனர். ‘பாம்புக்கடி’ அறிவிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





