--- --:--:-- --

கோலாகலமாக நடந்த திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு விழா..!

3

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையே குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த வாரம் யாக சாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

 

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 8 ஆம் கால யாக வேள்விகள் நிறைவு பெற்ற நிலையில், யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது 10 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் கட்டண தரிசனம் கிடையாது .பொது தரிசனம் மட்டுமே என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

 

மேலும் வழக்கமாக காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடை சாத்துவது ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு நடை சாத்தப்படும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon