--- --:--:-- --

இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

2

தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

மேலும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், வங்கக்கடலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon