--- --:--:-- --

இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

3

மிழ்நாட்டில் ஒரு வார காலத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 24ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 22ஆம் தேதி 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அன்றைய தினம், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Right Menu Icon