கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவதாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




