--- --:--:-- --

தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்..!

1

மிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 23 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ், இயல்பை விட அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது.

 

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வரும் 23 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மேடவாக்கத்தில் 16 சென்டி மீட்டரும் வளசரவாக்கம், சாலிகிராமத்தில் தலா 11 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon