ஆளை தூக்கும் சூறாவளி காற்று: சீனாவில் எச்சரிக்கை!
சீனாவில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் வினோதமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசி வரும் சூறைக்காற்றால் 50 கிலோவுக்கும் எடை குறைவான நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒல்லியானவர்களை தூக்கி வீசும் அளவுக்கு பலத்த காற்று வீசுவதால் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




