9-ம் தேதி தமிழக பாஜக புதிய தலைவர் அறிவிப்பு
தமிழக பாஜக புதிய தலைவர் யார் என்பது குறித்து வருகிற 9-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள தருணத்தில் உடனடியாக தலைவரை மாற்ற கட்சி மேலிடம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மோடி டெல்லி திரும்பியதும் பாஜக மூத்த தலைவர் கிரண் ரிஜிஜூ சென்னை வருவார் என்றும், பிறகு கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.






