துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்..!
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு தரும் தண்டனையே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 72 ஜோடிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், ஆனால் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்றும் மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.இப்படி, மக்கள் தொகையில் விழிப்புணர்வுடன் இருக்கும் தமிழ்நாட்டுக்கு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய அரசு தண்டனை வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பெண்கள் முன்னேற்றத்திற்காக எண்ண்ற்ற திட்டங்களை முதலமைச்சர் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். செயல்படுத்த முடியாத திட்டம் என பலரும் தெரிவித்த மகளிர் உரிமை தொகை திட்டத்தையும் செயல்படுத்தி காட்டியவர் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
“இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




