--- --:--:-- --

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்..!

3

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்தியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய வீடியோவை தீவிரவாத குழுக்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்த கடத்தல் சம்பவத்தில் 182 பயணிகள் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.  சிலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனை பலூச் விடுதலை படை எனும் தீவிரவாதிகள்தான் செய்திருக்கிறார்கள். ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி தீவிரவாதிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மலைக்கு மேலேயும் தீவிரவாதிகள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருக்கிறது.

 

இந்த கடத்தல் சம்பவத்திற்கு அந்நாட்டு அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பலூசிஸ்தான் பகுதி எல்லா வளங்களையும் கொண்டு பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக இருப்பதாகவும், ஆனால், இதுவரை எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை என்றும் எனவே தனிநாடு கோரிக்கையை தாங்கள் முன்வைத்திருப்பதாக பலூச் விடுதலை படை எனும் தீவிரவாதிகள்தான் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon