--- --:--:-- --

ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்!

4

கடந்த 2017 ஆம் ஆண்டு எமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இப்படம் மஞ்சுவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய ஷில்பா தென்னிந்திய திரைப்படத்துறையில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

 

முதன் முதலில் கன்னட படமான முன்கரு மலே 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தான் விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.மீண்டும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி திரைப்படத்தில் அறிமுகமானார்.

 

இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருக்க ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமானார்.

 

தமிழ் படத்தை தொடர்ந்து கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருகிறார்.படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon