பஞ்சர் ஒட்டும் கடையில் டயர் வெடித்து சிதறி விபத்து..!
கர்நாடகாவில் மெக்கானிக் கடை ஒன்றில் டயர் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். உடுப்பி மாவட்டத்தில் வாகனங்களுக்கு பஞ்சர் ஓட்டும் கடை ஒன்றில் 19 வயதான இளம் தொழிலாளர் ஒருவர் பணியில் இருந்துள்ளார்.
டயரில் காற்று அடித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அந்த டயர் வெடித்து சிதறியது. இதில் அந்த இளைஞர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





