கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அறிவுரை
4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் டிச., 10 முதல் டிச., 13 வரை 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.





