இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது சென்னையில் இருந்து 720 கிலோமீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும் மணிக்கு 8 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
இது புயலாக வலுப்பெறும் என்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவானால், அதற்கு ‘ஃபெங்கல்’ என பெயரிடப்பட உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அந்தந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துவருகிறார்கள்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,
அரியலூர், கொடைக்கானல் ஒன்றியம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






