சுற்றுலாவிற்காக எல்லையை திறந்துவிடும் ராணுவம்
எல்லைப்புற ஊரகப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த, இதுவரை தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிகளை ராணுவம் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் Vibrant Village திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வான் நினைவிடம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசு அதிகாரிகளுடன், ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.






