நடுரோட்டில் சிறுமி, இளைஞரை வெட்ட முயன்ற நபர்.!
சென்னை அயனாவரத்தில் நேற்று முன்தினம் சிறுமி மற்றும் இளைஞரை பட்டப்பகலில் கத்தியால் வெட்ட முயன்ற வரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் மணிகண்டன் சிறை சென்று திரும்பிய நிலையில் வழியில் அவரை கண்ட சிறுமியின் சகோதரி கணவரான சந்தோஷ் ஆத்திரத்தில் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.






