--- --:--:-- --

பெண் மீது ஏறிய லாரியின் சக்கரம்..கணவன் கண்முன்னே பரிதாபமாக போன உயிர்..!

7

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். கூலித்தொழிலாளியான பெரியசாமி என்பவர் தனது மனைவி கருப்பாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்து நேரிட்டது.

 

லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கருப்பாயின் மீது லாரி சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Right Menu Icon