--- --:--:-- --

ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டை குழந்தைகள்..!

8

மத்திய பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து கடந்த மூன்றாம் தேதி வரை 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

 

இதில் 6 இரட்டையர்கள் 72 மணி நேரத்திற்கு பின் பிறந்துள்ளன. அதில் அனைவருக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

 

அதில் எடை குறைவாக இருந்ததால் ஒரு பெண் குழந்தை மட்டும் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் ஒன்பது இரட்டை குழந்தைகளில் பிறந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon