பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம் திமுக: முதல்வர்
பேச்சின் மூலமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் திமுக என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர், திமுக ஆட்சி கட்டிலில் அமர, திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.
அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்கள், திமுக கொள்கைகளை மக்களிடம் பேசிப்பேசியே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




