படத்தில் காதலர்களைப் பிரித்த வில்லனை அறைந்த பெண்..!
படத்தில் காதல் ஜோடியை பிரித்த வில்லனை நிஜத்தில் பெண் ஒருவர் பளார் என அறைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் நடித்த குழுவினர் தியேட்டருக்கு விசிட் அடித்தனர்.
இந்த நிலையில் படம் முடிந்தவுடன் மேடைகளில் ஏறிய பெண் ஒருவர் வில்லனை தாக்கத் தொடங்கினார். படத்தில் காதல் ஜோடியை பிரித்த வில்லனை ஆத்திரமடைந்து தாக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வில்லன் நடிகர் ராமசாமியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.






