--- --:--:-- --

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியது

10

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அமைந்தகரை அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்வாங்கியுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி 150 மீ தூரத்திற்கு, 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குடியிருப்பின் சுவரிலும் விரிசல் விழுந்துள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon