சுந்தரி சீரியல் நடிகைக்கு முடிந்த திருமணம்..!
சன் டிவியின் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் ஸ்ரீகோபிகா. நெகடிவ் கலந்த ரோல் என்றாலும் அவருக்கு அந்த தொடரில் நடித்ததன் மூலமாக அதிகம் பாராட்டுகளும் கிடைத்து வந்தது.
தற்போது ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்து இருக்கிறது. அது காதல் திருமணம் எல்லாம் இல்லை, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் தான் என ஸ்ரீகோபிகா கூறி இருக்கிறார்.
வருண்தேவ் என்பவரை தான் ஸ்ரீகோபிகா கரம் பிடித்து இருக்கிறார். கோவிலில் நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் இதோ.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




