மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவுள்ளது.
தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளுக்கு ஏற்கெனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதில், முதன்முதலாக தமிழுக்கு 2004ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





