மனைவியுடன் பலவந்த உறவு..கணவர் குற்றவாளியா?
மனைவியுடன் கணவர் பலவந்தமாக உறவு கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் கணவர் பலவந்தமாக உறவு கொள்வதை குற்றமாக கருத கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக இவர் மாறுபட்ட தீர்ப்புகளை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றது. வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்ள கணவருக்கு உரிமை இல்லை என்றாலும் இது பாலியல் குற்றமாக கருத முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் கணவன் மனைவி உறவில் தனி நபரின் ஒப்புதல் இருந்தால் என்பதை இன்னொரு குறித்து கடிதம் என்றும் அதனை பாலியல் குற்றமாக கருதி தண்டனை வழங்குவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





