கள்ளச் சந்தையில் மதுவிற்பனை..டிக் டாக் பிரபலத்துக்கு ஆப்பு..!
பொன்னேரி அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த டிக் டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் வசித்து வரும் தென்றல் சாந்தி என்பவர் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் ஆவார்.
இவர் கோனூர் கிராமத்தில் கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தென்றல் சாந்தியின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் டிக் டாக் பிரபலம் தென்றல் சாந்தியை கைது செய்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





