234 தொகுதிகளிலும் கொடியை பறக்க விட அறிவுறுத்தல்..!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று தவெக கொடியை ஏற்ற அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் கொடியை ஏற்ற அனுமதி பெற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிர்வாகிகள் தங்கள் சொந்த இடத்தில் கொடியை ஏற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆக.22ம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




