திருப்பூரில் கியாஸ் நுகர்வோர் கூட்டம்..!
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள, நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண் 120-ல் நடைபெறுகிறது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




