சென்னை தினம்..முதலமைச்சர் வாழ்த்து..!
சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் சென்னை மாநகரம் நிலமாக மட்டுமல்லாமல் நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதனின் உயிராகவும் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வாழ்வு தேடி வந்த பலருக்கு வசந்தத்தை வழங்கிடவா என்று தன் மடியோடு ஏந்தி கொண்ட தாய் சென்னை என்று குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி சென்னையே நமது சமத்துவபுரம் என்றும் பல கனவுகளை வெற்றி கதைகளாக எழுதிய எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





